கட்டகத் தேவைகள்
விண்டோஸ்
விண்டோஸ் கணினியில் லிப்ரெஓபிஸை நிறுவத்த தேவையாக அடிப்படை கட்டக முன் தேவைகள் பின்வருமாறு:
- மைக்ரோசாப்ட் விண்டோஸ் XP, விஸ்டா, விண்டோஸ் 7, or விண்டோஸ் 8;
- பென்டியம் கணினி (பென்டியம் III, அத்தெலான் அல்லது அண்மையில் வெளிவந்த கணினிகள்);
- நினைவகம் 256 மெபை (பரிந்துரைக்கப்பட்ட நினைவகம் 512 மெபை);
- 1.5 கிபை சேமிப்பிடம் தேவை;
- 1024x768 தெளித்திறனும் 256 நிறங்களும் இருக்க வேண்டும்(அதிக தெளித்திறன் இருப்பது நல்லது);.
நிறுவுவதற்கு கணினி நிர்வாகியின் அனுமதி தேவை.மென்பொருள் நிறுவும் பொருட்டோ நீக்கப்படும் பொருட்டோ தரவுகளை பேக்கப் எடுக்கவும்.
சில அம்சங்களைத் தவிர மற்ற பயன்பாடுகளுக்கு ஜாவா தேவைப்படும். பேஸ்க்கு ஜாவா கட்டாயாமாத் தேவை.
ஏப்பல் - மேக் OS X
எப்பல் மேக் OS X கணினியில் நிறுவும் போது இருக்க வேண்டிய வன்பொருள்/மென்பொருள் தேவைகள் பின்வருமாறு:
- மேக் OS X 10.6 (ஸ்னோவ் லியோபார்டு) அல்லது கூடுதலாக;
(லிப்ரெஓபிஸ் 4.1 - Mac OS X 10.4 ) - இன்டெல் செயலி;
(குறிப்பு: லிப்ரெஓபிஸ் பதிப்பு.4.1 ஆதரவு நீக்கப்பட்டது); - நினைவகம் 512 மெபை;
- 800 மெபை வரை சேமிப்பிடம் தேவை;
- திரையானது 1024x768 தெளிதிறனையும் 256 நிறங்களையும் வைத்திருக்கனும் (அதிக தெளித்திறன் இருப்பது நல்லது).
சில அம்சங்களைத் தவிர மற்ற பயன்பாடுகளுக்கு ஜாவா தேவைப்படும். பேஸ்க்கு ஜாவா கட்டாயாமாத் தேவை.
மென்பொருள் நிறுவும் பொருட்டோ நீக்கப்படும் பொருட்டோ தரவுகளை பேக்கப் எடுக்கவும்.
நீங்கள் மேக் OS X 10.8 (மவுன்டைன் லையன்), பயன்படுத்தினால் ஏப்பலின் புதிய கேட்கீப்பரில் பிரச்சனை வரும். அப்படியேனில் இந்த கட்டுரை உதவும்.
கனூ/லினக்ஸ்
பொதுவாக லினக்ஸ் கணினியில் விநியோகத்தை பொருத்து லிப்ரெஓபிஸை நிறுவ வழிமுறைகள் இருக்கும் உதாரணமாக உபுண்டு மென்பொருள் மையத்திலிருந்து எளிமையாக நிறுவ முடியும். மேலும் லினக்ஸ் இயங்கு தளங்களில் லிப்ரேஓபிஸ் முன்னிருப்பாக நிறுவப்பட்டு வரும்.
லினக்ஸில் நிறுவும் போது இருக்க வேண்டிய வன்பொருள்/மென்பொருள் தேவைகள் பின்வருமாறு:
- லினக்ஸ் கர்னல் பதிப்பு 2.6.18 அல்லது கூடுதலாக;
- glibc2 பதிப்பு 2.5 அல்லது கூடுதலாக;
- gtk பதிப்பு 2.10.4 அல்லது கூடுதலாக;
- பென்டியம் கணினி (பென்டியம் III, அத்தெலான் or அண்மைய வெளிவந்த கணினிகள்);
- 256மெபை நினைவகம் (512மெபை RAM பரிந்துரைத்தது);
- 1.55கிபை சேமிப்பிடம் தேவை;
- 1024x768 தெளித்திறனும் 256 நிறங்களையும் கொண்ட X Server இருக்க வேண்டும்(அதிக தெளித்திறன் இருப்பது நல்லது);
- குனோம் 2.16 அல்லது கூடுதலாகவும், gail 1.8.6 மற்றும் at-spi 1.7 (இவை assistive technology [AT] கருவிகளைாக பயன்படும்) போன்ற பொதிகள் இருக்க வேண்டும் , அல்லது தகுந்த பயனர் இடமுகப்பு இருக்க வேண்டும்(கேபசூ, வேறுசில).
சில அம்சங்களைத் தவிர மற்ற பயன்பாடுகளுக்கு ஜாவா தேவைப்படும். பேஸ்க்கு ஜாவா கட்டாயாமாத் தேவை.
மென்பொருள் நிறுவும் பொருட்டோ நீக்கப்படும் பொருட்டோ தரவுகளை பேக்கப் எடுக்கவும்.
எங்களைத் தொடருங்கள்