ரைட்டர்

ஒரு நவீன, சக்திவாய்ந்த சொற்செயலி (word processor) மற்றும் பணிமேடை பதிப்பாளரில் (desktop publisher) நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்து சிறப்பியல்புகளையும் ரைட்டர் கொண்டிருக்கிறது. ஒரு சிறு குறிப்பாகட்டும், அல்லது உள்ளடக்கங்கள், வரைபடங்கள், அகவரிசைகள் போன்றவை அடங்கிய ஒரு பெரிய நூலாகட்டும், எதற்கும் ரைட்டர் தயார். உங்கள் முழுக்கவனத்தையும் நீங்கள் சொல்லவரும் செய்தியில் செலவிடலாம்; அதனை அழகாகக் காட்டும் பணியை ரைட்டர் செய்யும்.

லிப்ரெஓபிஸில் தயாரிக்கப்படும் உங்கள் ஆவணங்களை அதே தரத்துடன், அழகுடன் வேறெங்கும் தயாரிப்பது அரிது. உங்கள் கணினியில் உள்ள எந்த எழுத்துருவையும் பயன்படுத்தி, ஆவணத்தின் ஏறத்தாழ எப்பகுதியிலும் நீங்கள் விரும்பிய பாணியை அமைத்துக்கொள்ளலாம். நீங்கள் தமிழிலோ ஆங்கிலத்திலோ எழுதினால், தானாகத் திருத்தும் அகராதியின் உதவியுடன் எழுத்துப்பிழைகளை நீங்கள் தவிர்க்கலாம் அல்லது குறைக்கலாம். இதர மொழிகளுக்கும் ரைட்டர் உங்களின் உற்ற துணைவனாக நிற்கும்.

கடிதங்கள், தொலைநகல்கள், நிகழ்ச்சி நிரல்கள், கூட்டக் குறிப்புகள் போன்ற சாதரண ஆவணங்களைத் தயாரிப்பதில் உள்ள சிக்கல்களை லிப்ரெஓபிஸின் வழிகாட்டிகள் குறைக்கும். அஞ்சல் ஒன்றாக்கல் (mail merge) போன்ற சிக்கலுள்ள வேலைகளையும் அவை எளிமையாக்கும். இப்பணிக்குத் தேவையான ஆவண வார்ப்புருக்கள் இயல்பாகவே லிப்ரெஓபிஸில் இடம்பெற்றுள்ளன; சிக்கலான இந்த ஆவணங்களை நீங்கள் தயாரிக்க வேண்டிய தேவையில்லை -- அவற்றை நாங்கள் ஏற்கனவே தயாரித்து விட்டோம்!

எங்களைத் தொடருங்கள்