பின்னூட்டம்

கேள்வி இருக்கிறதா? வழு இருக்கிறதா?

நாங்கள் உங்களைப் பொன்ற பயனர்களின் கருத்துகளைக் கேட்கப் பேர் அவா கொண்டுள்ளோம். ஓர் ஒப்புயர்வற்ற மென்பொருளை உருவாக்க உங்கள் கருத்துகளும் நீங்கள் அளிக்கக்கூடிய வழு அறிக்கைகளும் இன்றியமியா பங்கை ஆற்றலாம். நீங்கள் ...

கேள்வி கேட்கனுமா

லிப்ரெஓபிஸிலுள்ள ஒரு அம்சம்பற்றி தெரியவில்லையா? 'ஆஸ்க் லிப்ரெஓபிஸ்' தளத்திலுள்ள எங்கள் அனுபவம் வாய்ந்த பயனர்களின் உதவியை நாடுங்கள்.

ஒரு வழு அறிக்கையைக் கொடுக்கனுமா

மென்பொருள் வீழ்ச்சி, தவறான செயல்பாடு போன்ற சிக்கலை ஏதும் நீங்கள் எதிர்கொள்கிறீர்களா? எங்கள் உருவாக்குநர்களுக்கு ஒரு வழு அறிக்கையை அனுப்புங்கள்.

செழுமையாக்க கோரிக்கை ஒன்றை வைக்கனுமா

லிப்ரெஓபிஸில் முக்கிய அம்சம் ஏதும் இல்லையா, அல்லது லிப்ரெஓபிஸைச் செம்மைபடுத்தும் ஒரு புதிய அம்சத்தைப் பற்றி சிந்திக்கிறீர்களா? எங்களிடம் தெரிவியுங்கள்!

லிப்ரெஓபிஸ் ஒரு சமுதாயம்: எங்களுடன் சேருங்கள்!

வழுவைப் பதிந்தப்பின் அதற்கு என்ன ஆகிறது என வியக்கிறீர்களா? உங்களுக்குப் பிடித்தமான அம்சத்தை உடைத்த 'கமிட்' எது என்பதைத் தடமறிய ஆவலா? லிப்ரெஓபிஸின் தமிழாக்கத்தை இன்னும் செம்மைபடுத்த ஆசையா? எங்கள் தமிழா லிப்ரெஓபிஸ் குழுவில் சேருங்கள். நாங்கள் தன்னார்வளர்களை வருக வருகவென இருகரம் கூப்பி வரவேற்கிறோம்.

எங்களைக் கண்டறிய:

எவ்வித முன் அனுபவமும் தேவையில்லை. ஒரு கணினியும் இணைய வசதியும் இருந்தாலே போதும். வாருங்கள்! எங்களுடன் சேருங்கள்!

எங்களைத் தொடருங்கள்