உருவாக்குநர் பதிப்புகள்

வெளியீடு காண்பவை

முன் வெளியீட்டு பதிப்புகள் எங்களிடம் உள்ளன; ஆனால், இவை உற்பத்திக்குத் தயாராக இல்லை. எங்களுடன் இணைந்து உதவ ஆர்வம் கொண்டுள்ளீர்களா? தயவுசெய்து வெளியீடுபற்றிய குறிப்புகளைப் படியுங்கள்; எங்கள் சோதனை தர நிர்ணயப் பக்கத்தையும் பாருங்கள்.

  • 4.3 குறியீட்டின் RC தற்போது கிடைப்பிலில்லை
  • 4.2 குறியீட்டின் RC தற்போது கிடைப்பிலில்லை

குறிப்பு: வெளியீட்டு வடிவாக்கத்திலுள்ள இப்பதிப்பு உங்கள் கணினியில் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள லிப்ரெஓபிஸை இடமாற்றிடும்! இதனைத் தடுக்க, நீங்கள் இணை நிறுவலைப் பயன்படுத்தி இப்பதிப்பைச் சோதித்துப் பார்க்கலாம்.

முன் வெளியீட்டுச் சேவையகத்தை அணுகி நீங்கள் விரும்பும் பதிப்பை அங்கே பெறுங்கள்.

இரவு உருவாக்கங்கள்

இரவு உருவாக்கங்கள் லிப்ரெஓபிஸின் முன்னோடி மேம்பாட்டுப் பதிப்புகள் ஆகும். அவை சோதனைக்குப் பயன்படும் வழக்கமான மேம்பாட்டுப் பிடிப்புகளாகக் கிடைக்கின்றன. அவை எவ்வித உத்தரவாதமும் இன்றி வருகின்றன.

இரவு உருவாக்கச் சேவகனை இங்கே அணுகவும்.

மூல நிரல்

அனைத்து நிரல் மூலங்களும் கிட்டில் இருக்கின்றன:

  • Clone: $ git clone git://anongit.freedesktop.org/libreoffice/core # (உலாவு)
  • Clone (http): $ git clone http://anongit.freedesktop.org/git/libreoffice/core.git #மெதுவாக

கூடுதல் வழிமுறைகள் இப்பக்கத்தில். எங்கள் உரிமங்கள் இங்கே.

எங்களைத் தொடருங்கள்

Mastodon