லிப்ரெஓபிஸ் என்றால் என்ன?

லிப்ரெஓபிஸ் ஒரு ஆற்றல்மிகுந்த அலுவலகத் தொகுப்பு ஆகும்; அதன் சுத்தமான முகப்பும் அதன் சக்திவாய்ந்த கருவிகளும் உங்கள் படைப்பாற்றலை வெளிக்கொணரவும் உங்கள் உற்பத்தித்திறனை அதிகரிக்கவும் உதவும். லிப்ரெஓபிஸ் பல செயலிகளைத் தன்னுள் அடக்கி இன்று சந்தையில் கிடைக்கும் மிகச் சிறந்த கட்டற்ற திறவுற்று அலுவலகத் தொகுப்பாக விளங்குகிறது. அதன் 'ரைட்டர்' ஒரு சொற்செயலி; 'கல்க்' ஒரு விரிதாள்; 'இம்பிரெஸ்' ஒரு வழங்கல் பொறி; 'டிரோ' சித்திரங்களையும் பாய்வு விளக்கப்படங்களையும் தயாரிக்கப் பயன்படுகிறது; 'பேஸ்' ஒரு தரவுத்தளம்; இறுதியாக, அதன் 'மேத்' கணிதத்தைத் தொகுக்க உதவுகிறது.

உங்கள் ஆவணங்கள் பார்ப்பதற்குத் தொழில்திறன் மிகுந்தும் சுத்தமாகவும் தெரியும். அது ஒரு கடிதமாகவோ, கட்டுரையாகவோ, கணக்கறிக்கையாகவோ, துண்டு வெளியீடாகவோ, நுட்பியல் சித்திரமாகவோ, விளப்பப்படமாகவோ இருக்கலாம்; அனைத்தையும் பார்ப்பதற்குக் கவர்ச்சியாக அமைக்க லிப்ரேஓபிஸ் கைகொடுக்கும்.

மைக்ரோசொஃப்ட் வேர்டு, எக்செல், பவர்பொய்ண்ட், பப்லிஷர் போன்ற பல ஆவண வடிவூட்டங்களுடன் லிப்ரெஓபிஸ் ஒத்துப்போகிறது. தவிர்த்து, ஒரு நவீன திறந்த செந்தரமான ஓபன்டொகுமெண்ட் ஃபோர்மெட் (ODF) ஐப் பயன்படுத்தவும் அது உங்களுக்கு உதவும்.

லிப்ரெஓபிஸில் இயல்பாகவே பல சிறப்பியல்புகள் இடம்பெற்றிருந்தாலும், சில பயனர்களுக்குக் கூடுதல் தேவைகள் இருக்கலாம். அவர்கள் மிக எளிதாக லிப்ரெஓபிஸின் நீட்சி இயக்க அமைப்பைப் பயன்படுத்தி, இன்னும் கூடுதலான சிறப்பியல்புகளையும் ஆவண வார்ப்புருக்களையும் எங்கள் தளங்களிலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.

லிப்ரெஓபிஸ் ஒரு கட்டற்ற திறவூற்று மென்பொருளாகும். அதன் மேம்பாடு புதிய திறனாளிகளுக்கும் புதிய சிந்தனைகளுக்கும் திறந்திருக்கிறது. எங்கள் மென்பொருள் ஒரு பெரிய பயனர் சமூகத்தால் நாள் தோரும் பயன்படுத்தப்பட்டு சோதிக்கப்படுகின்றது. நீங்களும் எங்களோடு இணைந்து அதன் எதிர்கால மேம்பாட்டில் ஈடுபட்டு, உங்கள் அடிச்சுவட்டை அதில் பதிக்கலாம்.

 

· நம் மொழியில் அமைந்துள்ள லிப்ரெஓபிஸைப் பதிவிறக்கி எவ்வாறு அது உங்கள் படைப்பாற்றலை நாளுக்கு நாள் தூண்டுகிறது என்று கண்டறியுங்கள்!
· லிப்ரெஓபிஸ் எவ்வாறு மைக்ரோசொஃப்ட் ஓபீசுடன் ஒப்பிடுகிறது என்று பாருங்கள்.
· எங்கள் வெளியீட்டுக் குறிப்புகளை இங்கு பெறலாம்
.

எங்களைத் தொடருங்கள்