சமூக ஆதரவு

லிப்ரெஓபிஸ் சமூகத்தால் உருவாக்கப்பட்டு ஆதரிக்கப்படுகிறது. நீங்கள் சமூகத்தின் ஆதரவைப் பல வழிகளில் பெற முடியும். உங்களுக்குத் தொழில்முறை ஆதரவு வேண்டுமெனில் இப்பக்கத்தைப் பார்வையிடுங்கள்.

  • ஆவணமாக்கம்: லிப்ரெஓபிஸின் அனைத்து அம்சங்களைப் பற்றியும் உதவிக் கோப்புகள் உள்ளன. அவற்றைப் பார்க்க, விசைப்பலகையில் F1 என்ற விசையை அழுத்தி தேவையான தகவலைப் பெறலாம். இக்கோப்புகள் தற்போது ஆங்கிலத்தில் மட்டுமே கிடைக்கின்றன. (இவற்றைத் தமிழாக்க விரும்புவோர் எங்களைத் தொடர்புகொள்ளவும்.)  • லிப்ரெஓபிஸைக் கேள்: நீங்கள் தமிழா! லிப்ரெஓபிஸ் தளத்தில் லிப்ரெஓபிஸ் சார்ந்த கேள்விகளைக் கேட்டு உங்களின் சந்தேககங்களை தீர்த்துக்கொள்ளலாம். கேள்விகளை ஆங்கிலத்தில் கேட்பதற்கு ஆஸ்க் லிப்ரெஓபிஸ் தளத்துக்குச் செல்லுங்கள். உங்களைப் போன்ற இதர பயனர்கள் கேட்ட பல்லாயிரக்கணக்கான கேள்விகளையும் அங்குப் பாக்கலாம்.

  • விக்கி: லிப்ரெஓபிஸ் தமிழாக்கத்துக்குப் பங்களித்தவர்களின் பெயர்களும் லிப்ரேஓபிஸ்பற்றிய விவரங்களும் இங்குத் தரப்பட்டிருக்கிறது.

  • நேபல்: மடலாடற் குழுவில் நடைபெறும் விவாதங்களை எளிதாகப் படிக்க நேபல் மன்றங்கள் உதவுகின்றன.

எங்களைத் தொடருங்கள்

Mastodon