புதிய சிறப்பியல்புகள்

மைக்ரோசொஃப்டின் OOXML, குறிப்பாக DOCX, மற்றும் பழைய RTF, இவற்றுடன் ஒத்தியங்கும் திறன் இப்போது செம்மைபடுத்தப்பட்டுள்ளது. 'அபிவேர்டு' ஆவணங்களைப் பதிவிறக்குவதற்கான வடிகட்டியொன்றும் சேர்க்கப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் ஏராளமான கணக்குகளைத் தனது சூத்திரக் கலங்களுக்குள் செய்யும் திறனைக் கல்க் இன்று பெற்றுள்ளது.

திறந்துள்ள ஆவணங்களின் சிறுபடங்கள் இப்போது நிரலுக்கேற்றவாறு குழுவாக்கப்படுவதோடு இடையில் திறந்த ஆவணங்களின் பட்டியலும் காட்டப்படுகின்றது. இவையிரண்டும் பணிப்பட்டையில் தென்படுகின்றன.

லிப்ரெஓபிஸ் 4.2 புதியதொரு தொடக்கத் திரையைத் தருகின்றது. அதன் சுத்தமான தளக்கோலம் வெற்றிடங்களைச் சிறப்பாகப் பயன்படுத்தி இறுதி ஆவணங்களின் முன்னோட்டங்களையும் காட்டுகிறது.

லிப்ரெஓபிஸை உங்கள் நிறுவனத்தில் பரவலாகப் பயன்படுத்துவதற்கான வழியை இன்று எங்கள் மேம்பட்ட குழுக் கொள்கை கட்டுப்பாடுகள் ஏற்படுத்தித் தருகின்றன. உங்கள் விருப்பத்திற்கேற்றவாறு நீங்கள் இப்பணியைச் செய்ய எங்களது எளிய இடைமுகப்பு உதவும். தற்போது மைக்ரோசொஃப்ட் விண்டோஸைப் பயன்படுத்தும் பெரிய நிறுவனச் சூழலில் லிப்ரெஓபிஸைப் பரப்புவதற்கு ஒரு புதிய வல்லுநர் வடிவாக்க உதவியாளரும் இருக்கிறது.

எங்களைத் தொடருங்கள்