மூல நிரல்கள்

அனைத்து நிரல் மூலங்களும் கிட்டில் ஏற்றப்பட்டுள்ளன:

  • Clone: $ git clone git://anongit.freedesktop.org/libreoffice/core # (உலாவு)
  • Clone (http): $ git clone http://anongit.freedesktop.org/git/libreoffice/core.git # மெதுவானது
  • Tarballs of git repositories: http://dev-www.libreoffice.org/bundles/ (ஒருவேளை git சேவகன் பிரச்சனையிலருந்தால் அல்லது கிட் பயன்படுத்துவதை உங்கள் பயர்வால் தடுத்தால்)
  • Tarballs வெளியீடு: http://download.documentfoundation.org/libreoffice/src/ தயவுச்செய்து அண்மைய பதிப்பை பாருங்கள் (எப்போதும் அடியில் காணப்படும்)

--> எப்படி லிப்ரெஓபிஸை உருவாக்குவது பற்றிய ஆவணத்தைப் படிக்கவும்

--> கட்டகம் உருவாக்கம் பற்றிய சுருக்கத்தை படிக்கவும்

--> எப்படி லிப்ரெஓபிஸ் உருவாக்குவது என்பது பற்றிய ஒரு காணொளி ஆவணத்தைப் பாருங்கள்

--> கெடெவலப் உடன் லிப்ரெஓபிஸை எப்படி ஹேக்கிங் செய்வது பற்றி ஒரு காணொளியைப் பாருங்கள்


 

இதை உருவாக்கி இயக்கிப்பாருங்கள்:

இந்த வழிகாட்டல்கள் குனு/லினக்ஸ் இயங்குதள பயனர்களுக்கு மட்டுமே. இவையனைத்தும் கட்டளைகளாக முனையத்தில்(Terminal) இயக்க வேண்டியருக்கும். எனவே உங்கள் இயங்குதளத்திற்கான லிப்ரெஓபிஸ் பொதியை உருவாக்க தேவையான கட்டக மென்பொருட்களை நிறுவவும். பின்வரும் எளிமையான வழிமுறையை பின்பற்றினாலே போதுமானது:

டேபியன்(Debian & derivatives)
sudo apt-get build-dep libreoffice

உபுண்டு (Ubuntu-in addition to Debian)#  -

ஓபன் சுசே(OpenSUSE 11.4+)
sudo zypper si -d libreoffice

பெடோரா 15+
sudo yum-builddep libreoffice

நிரல் மூலங்களை முழுமையாக பதிவிறக்கியப்பின் உருவாக்கவும்:

./autogen.sh
make
instdir/*/program/soffice # செயலியை துவக்குகிறது

அல்லது எளிமையான வழு நீக்கலுக்கு:

make debugrun #இது லிப்ரெஊபிஸை gdb இல் துவங்கச்செய்யும்

லிப்ரெஒபிஸ் உருவாக்கத்தில் உங்களுக்கு பிரச்சனை நேர்ந்தால் "எப்படி லிப்ரெஓபிஸை உருவாக்குவது" என்ற விக்கி பக்கத்தை படியுங்கள் அல்லது எங்களை IRC இல் தொடர்பு கொள்ளுங்கள்.

எங்களைத் தொடருங்கள்

Mastodon