மேக் OS X

மேக் கணினியில் லிப்ரெஓபிஸை நிறுவும் முன்னர் கட்டகத்தேவைகளை சரிபார்க்கவும்.

  • இந்தப் பக்கத்திலிந்து .DMG கோப்பை பதிவிறக்கவும்
  • DMG கோப்பினை இருமுறை சொடுக்கி திறக்கவும்.
  • நிறுவல் சாளரம் தோன்றும்: லிப்ரெஓபிஸ் சின்னத்தை பயன்பாட்டு அடைவில் இழுத்து விடவும். கணினி நிர்வாகியின் கடவுச்சொல்லை உள்ளிட வேண்டி இருக்கும்.
  • நடைப்பெறும் நிறுவலானது எப்போது முடியும் என்பதை காட்டும்.
  • லிப்ரெஓபிஸை தமிழ் இடைமுகப்புடன் பயனபடுத்த தேவையான மொழிக்கோப்பை(.DMG கோப்பு) பதிவிறக்கவும். நிறுவல் ஏறக்குறைய மேற்கண்ட மாதிரியே.

மேக் OSX 10.8 மற்றும் அண்மைய பதிப்பின் பயனர்களுக்கு : நீங்கள் மேக் OS X 10.8 (மவுன்டைன் லையன்) பயன்படுத்திருந்தால், புதிய கேட்கீப்பரில் பிரச்சனை வரலாம். அப்படியானல் இந்த கட்டுரை உதவியாக இருக்கும்.

எங்களைத் தொடருங்கள்