நிர்வாகம்
தெ டோகுமெண்ட் ஃபெளண்டேஷன்
தெ டோகுமெண்ட் ஃபெளண்டேஷன் உறுப்பினர் குழுவால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. லிப்ரெஓபிஸ் செயல்திட்டத்தின் நோக்கம் இதனை தொடர்ந்து வளர்ப்பதும் மக்களிடையே பரப்புவதாகும். எங்களுடைய திட்ட அறிக்கை இங்கே படிக்கவும். இந்த அறக்கட்டளை பல்வேறு அங்கத்தினராலும் அலுவலர்களாலும் நிர்வகிக்கப்படுகிறது:
- நிர்வாக இயக்குநர்கள். அறக்கட்டளை செயல்திட்டத்தின் குழுவை நிர்வகிப்பதில் நிர்வாக இயக்குநர்களே முதன்மை பங்கு வகிக்கின்றனர். அறக்கட்டளையின் நீதித்துரைக்கும் நீதிக்கு புறம்பானவற்றைக்கும் நிர்வாக இயக்குநர்களே பிரதிநிதிகளாக செயல்படுவர்.
- அவை உறுப்பினர்கள். உறுப்பினர்களின் விண்ணப்பங்களை நிர்வகிப்பதிலும் அதை மீள்பதிவு செய்வதிலும் நிர்வாக உறுப்பினர்களின் தேர்தலை மேற்பார்வையிடுவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
- அறங்காவலர் குழு. அறக்கட்டளையின் செயல்திட்டத்தில் அடிக்கடி பங்களிக்கும் நபர்கள் அறங்காவலர் குழுவில் அடங்குவர். இந்தக் குழுவின் உறுப்பினராக எங்கள் கட்டளைகளில் வரையறுக்கப்பட்டள்ள அடிப்படைகளை பூர்த்திச் செய்தால் எங்களுடைய விண்ணப்ப படித்தைக் கொண்டு விண்ணப்பிக்க வேண்டும்.
அறக்கட்டளைக்கு உதவிப் புரியும் பிந குழுக்கள்:
- பொறியியல் வழிநடத்தும் குழு - லிப்ரெஓபிஸ் செயல்திட்ட குழுவிற்கு தேவையான பொறியியல் நுட்பம் சார்ந்த வேலைகளை வழிநடத்துகிறது.
- ஆலோசனைக் குழு - நிர்வாக குழுவிற்கு தேவையான ஆலோசனைகளை வழங்குவதுடன் தேவைப்படும் பண உதவிவயையும் வழங்கும்.
- தமிழா! குழு - லிப்ரெஓபிஸ் செயல்திட்டதை தமிழ்(Tamil) படுத்துவதோடு மட்டுமில்லாமல் இதைனை கடைக்கோடி பயனர்களிடம் பயன்படுத்தும் விதத்தில் மாற்றி சென்றடையச்செய்கிறது. தமிழ்நாடு-இந்தியா, மலேசியா போன்ற நாடுகளில் இதன் பயனர்கள் ஆர்வத்துடன் பயன்படுத்துகிறார்கள்.
லிப்ரெஓபிஸ் செயல்திட்டம்
லிப்ரெஓபிஸ் செயல்திட்டம் சமுதாயத்தாலும் தெ டோகுமெண்ட் ஃபெளண்டேஷன் அமைப்புகளான, பொறியியல் வழிநடத்தும் குழுவாலும் இயக்குநர் குழுவாலும் இயங்கி வருகிறது. லிப்ரெஓபிஸ் செயல்திட்டம் பல்வேறு குழுக்களின் பங்களிப்பு மூலம் மொழிபெயர்ப்பு, வடிவமைப்பு, விளம்பரம், ஆவணமாக்கம், சோதனை, விரிவுப்படுத்தல் போன்ற மேம்பாட்டு பணிகளைச் செய்து வருகிறது. இக்குழுக்கள் பங்களிப்புகளுக்கு காத்திருக்கிறது, எனவே இன்றே எங்களுடன் சேருங்கள்.
எங்களைத் தொடருங்கள்